முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று தொடங்கும் டி-20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு தயாராக உள்ளோம்: கேப்டன் ரோகித்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      விளையாட்டு
Indian-team 2023-10-30

Source: provided

நியூயார்க் : இன்று தொடங்கவுள்ள டி-20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுக்குத் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆப்கானுடன்...

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 8 சுற்று இன்று ஆரம்பமாக உள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான வெற்றிகள் இந்திய அணியை சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய வழிவகுத்தது. சூப்பர் 8 சுற்றில் நாளை (ஜூன் 20) ஆப்கானிஸ்தானை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த நிலையில், சூப்பர் 8 சுற்று சற்று பரபரப்பாக இருக்கப் போகிறது. இருப்பினும், இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தயாராக இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

அனுபவம் உள்ளது...

இது தொடர்பாக அவர் பேசியதாவது., சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் விளையாடிய அடுத்த 3 - 4 நாள்களில் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளோம். குறுகிய நாள்களில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடவுள்ளதால், சிறிது பரபரப்பாக இருக்கப் போகிறது. ஆனால், இதுபோன்ற சூழல்களை ஏற்கனவே சந்தித்த அனுபவம் இருக்கிறது. நாங்கள் அதிக பயணம் செய்து போட்டிகளில் விளையாடுவதால், அடுத்தடுத்து போட்டிகள் குறுகிய இடைவெளியில் இருப்பதை ஒரு காரணமாக கூறப் போவதில்லை. இந்திய அணி வீரர்கள் சூப்பர் 8 சுற்றில் விளையாட தயாராக இருக்கிறார்கள் என்றார்.

3 போட்டிகளில்...

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் சூப்பர் 8 போட்டியில் விளையாடும் இந்திய அணி வருகிற ஜூன் 22 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராகவும், ஜூன் 24 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சூப்பர் 8 சுற்றின் அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து