முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் உள்நாட்டு நிதி அமைப்பு வலுவாக உள்ளது: ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு

வியாழக்கிழமை, 20 ஜூன் 2024      இந்தியா      வர்த்தகம்
Saktikanta-Das 2023-09-03

மும்பை, இந்தியாவின் உள்நாட்டு நிதி அமைப்பு, இப்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த கருத்தரங்கில், சக்திகாந்த தாஸ் பேசியதாவது: 

சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால், உத்தரவாதம் இல்லாத கடன்கள் வாங்குவது குறைந்துள்ளது. நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கலாம். தற்போது சீராக உள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது 29 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு நிதி அமைப்பு இப்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்த நிதியாண்டில், சிறப்பாக செயல்பட்ட வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். 

உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. சவால்கள் மற்றும் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. எந்த மூலையிலிருந்தும் பிரச்னைகள் உருவாகும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து