முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்: இருளில் மூழ்கிய உக்ரைன்

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      உலகம்
Ukraine 2024-06-22

Source: provided

கீவ் : மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களால் தலைநகர் கீவ் உள்பட உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. மேலும் அந்த நாட்டின் பல பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்து தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது.

இதனிடையே நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட்டால் உக்ரைனில் போரை நிறுத்த தயார் என ரஷ்ய அதிபர் புடின் சமீபத்தில் தெரிவித்தார். மற்றொரு புறம் உக்ரைன் போர் தொடர்பாக சுவீடனில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில் போரை நிறுத்தக்கோரும் ஒப்பந்தத்தில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. 

இந்த நிகழ்வுகள் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தந்தன. ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா சரமாரியாக டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக தலைநகர் கீவ் உள்பட உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால் பல லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் இயங்காமல் போயின. இதனால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல்களால் அடிக்கடி மின்இணைப்பு துண்டிக்கப்படுவதால் ஜெனரேட்டர்கள், பவர்பேங் மற்றும் பிளாஷ்லைட் ஆகியவற்றின் உதவியுடன் வாழ பழகி வருவதாக உக்ரைன் மக்கள் கூறுகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து