முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஜிகிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      உலகம்
Hijab 2024-06-22

Source: provided

துஷான்பே : மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 

தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு 3 லட்சமும் மத தலைவர்களுக்கு 5 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

தஜிகிஸ்தான் அரசு கடந்த 2007-ம் ஆண்டில் கல்வி அமைச்சகம் இஸ்லாமிய உடை மற்றும் மேற்கத்திய பாணி மினி ஸ்கர்ட் இரண்டையும் மாணவர்களுக்கு தடை செய்த போது ஹிஜாப் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த போது தஜிகிஸ்தான் நாடு உருவானது. இந்நாட்டில் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாப் அணிய தடை செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து