முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 129 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது : வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      தமிழகம்
Weather-Center 1

Source: provided

சென்னை : தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 129 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வந்த நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். 

தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அதிக மழை பொழிவை பெறும். இந்நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை நேற்று காலை வரை இயல்பை விட 129 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் 1 முதல் ஜூன் 23 காலை வரை பெய்த மழை அளவு  92.8 மி.மீ ஆகும். இக்காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை 40.5 மி.மீ ஆகும். நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து