முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசர நிலை பிரகடனம்: கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 03

Source: provided

 சென்னை : 50 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் என்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது டுவிட்டர்  தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜூன் 25, 1975 அன்று, அரசியலமைப்பை குப்பையில் போட்டு, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கி, ஊடகங்களின் வாயைக் கட்டி, நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியில் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும், திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது. 

ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, ரைபிள் துப்பாக்கிகளின் கைப்பிடிகளால் தாக்கி, புத்தகங்கள், உடைகளைக் கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை வெளியேற்றிய நாளை நானும், எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்?.

சொந்த பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கறுப்பு அத்தியாயம் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில், நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம். இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து