முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரில் புயல் கரையை கடந்தது: டெக்ஸாசில் 25 லட்சம் பேர் தவிப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      உலகம்
Texas 2024-07-09

டெக்ஸாஸ், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பெரில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து அங்கு மின்தடை ஏற்பட்டதால் மாகாணம் முழுவதும் 25 லட்சம் பேர் பெரும் தவிப்புக்குள்ளாகினர். 

கரீபியன் தீவுகளில் உள்ள ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளையும் வெனிசுலாவையம் கடந்த வாரம் துவம்சம் செய்த பெரில் சூறாவளி புயல் மெக்சிகோவையும் உலுக்கி எடுத்து டெக்ஸாஸ் மாகாணத்தில் கரையை கடந்தது. 

கரீபியன் நாடுகளை 5 நாட்களுக்கு முன்பு வீசிய பெரும் சூறாவளி புயல் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவையும் விட்டு வைக்கவில்லை. இங்கு 11 பேர் உயிரிழந்த நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்த அந்த சூறாவளி புயல் மெக்சிகோவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான டெக்ஸாஸை நேற்று முன்தினம் அதிகாலை பெரில் புயல் தாக்கியது. மணிக்கு 80 மயில் வேகத்தில் புயல் காற்று வீசியதால் கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

கடல் அலைகள் மிகவும் சீற்றமாக காணப்பட்டன. பல நூறு மரங்கள் முறிந்து விழுந்தன. மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு பலத்த காற்றும், கனமழையும் டெக்ஸாஸ் மாகாணத்தையே முடக்கி போட்டன.

பெரில் புயல் காரணமாக டெக்ஸாஸ் மாகாணம் முழுவதும் 121 மாவட்டங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. கட்டுக்கடங்காத சூறைக்காற்று வீசியதால் டெக்ஸாஸ் சிட்டி துறைமுகம், கால் வெஸ்டர்ன் உள்ளிட்ட துறைமுகங்கள் மூடப்பட்டன. 

மின்தடை ஏற்பட்டதால் மாகாணம் முழுவதும் 25 லட்சம் பேர் இரவில் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். படிப்படியாக வேகம் குறைந்த இந்த சூறாவளி புயல் மடகோர்டா என்ற இடத்தில் கரையை கடந்தது.  பெரில் புயல் கரையை கடந்தாலும், டெக்ஸாஸ் கடற்கரையோர நகரங்களில் மிக கனமழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. 

அதே நேரம் கடந்த வாரம் கரீபியன் நாடுகளில் வீசும் போது எண் 5 ஆக வகைப்படுத்தப்பட்ட பெரில் புயல் 1-வது எண் அளவுக்கு வீரியம் குறைந்து கரையை கடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து