முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீன்ஸ் விமர்சனம்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      சினிமா
Dean s-Review 2024-07-15

Source: provided

குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் சிறுவர்கள் சிலர் ஒன்றுக்கூடி பெரியவர்கள் போல் அனைத்து விசயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சிறுமி ஒருவர் தனது பாட்டி வசிக்கும் கிராமத்தின் அழகு மற்றும் அங்கு பேய் இருப்பதாக சொல்கிறார். அந்த பேயை நேரில் சென்று பார்க்கலாம், என்று முடிவு செய்யும் சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள். 

சாலையில் நடக்கும் போராட்டத்தால் சிறுவர்கள் செல்லும் பேருந்து தொடர்ந்து பயணிக்க முடியாமல் போக, சிறுவர்கள் காட்டுப்பாதையில் நடந்து செல்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவர் திடீரென்று காணாமல் போக, அவரை தேடும் போது ஒவ்வொருவராக மாயமாகிறார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் அங்கும் இங்குமாக சிறுவர்கள் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கம் ஒவ்வொருவராக மாயமாவது தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இவர்களின் இந்த திடீர் மாயத்தின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

அறிவியல் உலகத்தின் அதிசயங்கள் பற்றி சிவர்கள் பேசுவது, மலைபாம்பின் வயிற்றை கிழிப்பது,அறிவியலைப் பற்றி சிறுவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று கதையில் வலியுறுத்தியிருப்பது, சிறுவர்களின் பெயர்கள் மற்றும் அதன் குணாதியசங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பாடல் ஆகியவை படத்தை ரசிக்க வைத்தாலும், குறிப்பிட்ட ஒரே இடத்தில் சிறுவர்களை ஓட வைத்திருப்பது, யோகி பாபுவை தேவையில்லாமல் திணித்திருப்பது, மேக்கிங் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது, போன்றவை படத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது.

மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பது அனைத்து காட்சிகளிலும் தெரிவதோடு, போலீஸ் விசாரணை, கிராமத்தில் குறி சொல்லும் பெண், பாட்டி, யோகி பாபு என கதையோடு ஒட்டாமல் பயணிக்கும் கதாபாத்திரங்களும், அவர்களுக்கான காட்சிகளும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. 

மொத்தத்தில், இந்த ‘டீன்ஸ்’ குழந்தைகள் லோடு பயனிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து