முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓமன் மசூதியில் துப்பாக்கிச்சூடு: இந்தியர் உள்பட 6 பேர் பலி

புதன்கிழமை, 17 ஜூலை 2024      உலகம்
Gun 2023 04 17

மஸ்கட், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஷியா முஸ்லிம் மசூதி அருகே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இந்தியர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இமாம் அலி மசூதி அருகே திங்கள்கிழமை இரவு நடந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர், நான்கு பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் காயமடைந்தனர். மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ஜூலை 15 ஆம் தேதி மஸ்கட் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, ஓமன் வெளியுறவு அமைச்சகம், ஒரு இந்தியர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தகவல் அளித்துள்ளது. மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது” என்றும் பதிவிட்டுள்ளது.

அல்-வாடி அல்-கபீர் பகுதியில் நடந்த சம்பவத்தின் போது தாக்குதல் நடத்திய 3 பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஷியா முஸ்லிம் விழாக்கள், ஊர்வலங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பலமுறை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து