முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழமையான சிவன் கோயிலுக்கு அரசின் தக்கார் நியமனம் செல்லும்: : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 17 ஜூலை 2024      தமிழகம்
Chennai-high-court2

Source: provided

சென்னை : சென்னையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு தக்காரை நியமனம் செய்த தமிழக அரசின் அறநிலையத்துறை உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை நெற்குன்றத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள திருவாலீஸ்வரர் - திரிபுரசுந்தரி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தக்கார் நியமனம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ரவி கே.விஸ்வநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பாக நேற்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அறநிலையத் துறை சிறப்பு வழக்குரைஞர் அருண் நடராஜன் ஆஜராகி அந்தக் கோயில் செயல் அலுவலர் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தார். மேலும், “நெற்குன்றத்தில் உள்ள திருவாலீஸ்வரர் - திரிபுரசுந்தரி கோயில் 700 ஆண்டுகள் பழமையானது என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகள் மூலமும், அறநிலையத் துறை தொல்லியல் துறை ஆய்வாளர் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. .

இந்த நிலையில், திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி கோயிலுக்கு நியமிக்கப்பட்ட தக்கார் நியமனம் செல்லும் என்று நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவிட்டார். மேலும், அடுத்த கட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து