முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 பேட்டர் தரவரிசை: டாப் 10-ல் ஜெய்ஸ்வால்

புதன்கிழமை, 17 ஜூலை 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-17

Source: provided

துபாய் : டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ஜெய்ஸ்வால் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்...

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 142 ரன்கள் குவித்ததன் மூலம் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளனர். மற்றொரு இந்திய வீரர் கெய்க்வாட் 2 இடங்கள் பின்தங்கி 8-வது இடம்பிடித்துள்ளார். சுப்மன் கில் 37-வது இடத்தில் உள்ளார்.

ஸ்மிர்தி மந்தனா...

இதேபோல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி) வெளியிட்டது. இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 5-வது இடத்தில் தொடருகிறார். இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 3 இடம் முன்னேறி 12-வது இடத்தையும், தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 2 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார்.

தீப்தி சர்மா 3-வது...

பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-3 இடங்களில் முறையே இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டன், சாரா கிளென், இந்தியாவின் தீப்தி ஷர்மா மாற்றமின்றி நீடிக்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் 10-வது இடமும், ராதா யாதவ் 15-வது இடமும் , பூஜா வஸ்ட்ராகர் 23-வது இடமும் , ஸ்ரேயங்கா பட்டீல் 60-வது இடமும் வகிக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து