Idhayam Matrimony

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து: பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      உலகம்
China-2024-07-18

பெய்ஜிங், சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவின் மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் ஜிங்காங் நகரில் வணிக வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்டோர் சம்பவ பகுதிக்கு சென்றனர்.  

அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த தீ விபத்தில் பலர் சிக்கி கொண்டனர்.  தீ விபத்தில் கரும்புகை வான்வரை பரவியது.  இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. அவர்களில் 30 பேர் முதல்கட்ட நடவடிக்கையில், பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.  

எனினும், மொத்தம் எத்தனை பேர் உள்ளே சிக்கியிருந்தனர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.  தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்து உள்ளது.

தீ விபத்தில் மொத்தம் 75 பேர் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.  உயிரிழந்தவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர் என தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றிய முதல்கட்ட விசாரணையில் கட்டுமான பணியால் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து