முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Veterinary 2023 06 11

Source: provided

சென்னை : தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று (ஆக. 7) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்.) உள்ளன.

இதைத் தவிர, திருவள்ளூா் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்பட 3 பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, சின்ன சேலம், உடுமலைப்பேட்டை, தேனி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இக் கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கு (பிவிஎஸ்சி) 660 இடங்களும், தொழில்நுட்ப பிரிவுகளான பி.டெக். உணவு, பால் (செங்குன்றம் அருகே கொடுவள்ளியில் கல்லூரி அமைந்துள்ளது), கோழியினம் (ஓசூா்) ஆகிய படிப்புகளில் 100 இடங்கள் உள்ளன.

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர மாணவா்களிடமிருந்து 14,500 விண்ணப்பங்களும், தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 3,000 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து