முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் வேத மந்திரங்களை ஓதி பெண்கள் நடத்தும் கும்பாபிஷேகம்: தஞ்சை அருகே இன்று நடக்கிறது

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      தமிழகம்
Tanjore-2024-09-05

தஞ்சை, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த, திருபுவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் கோவிலில்  தமிழில் வேத மந்திரங்களை ஓதி பெண்களே நடத்தும் கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடக்கிறது. 

இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை மற்றும் உலகளாவிய ஆசீவக தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞானபீடம் சார்பாக, தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த, திருபுவனம் இந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடம் மற்றும் விநாயகர், முருகன், வாலைக்குமாரி, பதினெண் சித்தர்கள், ஸ்ரீலஸ்ரீ மூட்டை சுவாமிகள் அருள்கூட கும்பாபிஷேகம் இன்று 6-ம் தேதி காலை 9.15 மணியில் இருந்து 10.15 மணிக்குள் நடக்கிறது. 

ஆசீவகத் தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் முன்னிலை வகிக்கிறார். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய முதல் கால யாகசாலை பூஜையில் தமிழ் வேத மந்திரங்களை பெண்களே ஓதி நடத்தினர். தொடர்ந்து இன்று நடைபெற உள்ள நான்கு கால யாகசாலை பூஜைகளிலும் பெண்களே தமிழ் மந்திரங்கள் ஓதுகின்றனர். 

அது மட்டுமல்லாமல் இன்று நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தையும் தமிழகத்தில் முதன்முறையாக பெண்களே நடத்துகின்றனர். அப்போது உழவுத் தொழிலின் குறியீடாம் பச்சை ஆடை உடுத்தி பெண்கள் கோயிலின் கருவறைக்கு சென்று, அவர்களது திருக்கரங்களால் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர். 

சித்தர் முறைப்படியும், சித்தர் மரபுபடியும் இக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. நிறைவாக விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து