முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவ - மாணவிகள் 136 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ - மாணவியர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ - மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிய பின், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ - மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினேன். மிகவும் பின்தங்கிய - துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவர்களது கல்விப் பயணத்தையும் - கல்வி மீதான அவர்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன்.

கல்விதான் உண்மையான பெருமையைத் தேடித் தரும் என உயர்படிப்புகளுக்குச் சென்றுள்ள இவர்கள் வாழ்வின் அத்தனை உயரங்களையும் காண வேண்டும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன். இப்படி கல்வியால் - உழைப்பால் முன்னேறிச் சாதனை படைப்பவர்களைத்தான் தமிழ்ச்சமூகம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து