முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக ரிஸ்க் எடுத்து விட்டேன்: காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      விளையாட்டு
31-Ram-54

Source: provided

லண்டன்: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாமல் சென்றது குறித்து அவர்  கருத்து தெரிவித்துள்ளார்.

தோள்பட்டை காயம்...

ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் ஓவலில் இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

அதிக ரிஸ்க்...

இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் (17) எடுத்த அவர் இது பற்றி பேசியதாவது:  இது அதிக ரிஸ்க், அதிக பலன் போன்றது. ரிஸ்க் அதிகமாக எடுத்ததால் இப்படியாகிவிட்டது. என்னுடைய எந்த வீரர் ஒருவருக்கும் இப்படி காயம் ஏற்பட நான் விரும்பவில்லை. தற்போது காயத்திலிருந்து குணமடைய தொடங்கியிருக்கிறேன். அடுத்த தொடரில் கவனம் செலுத்துகிறேன்.

உச்சரிக்க தெரியவில்லை...

ஆஷஸ் தொடருக்கு முன்பு இப்படியானது வருத்தம்தான். இந்தமாதிரி முடிவுகள் எடுக்க அதிக நேரத்தை வழங்குவேன். என்னால் உச்சரிக்க முடியாத தசையொன்று நன்றாகவே கிழிந்திருக்கிறது. அதன்பெயரை என்னால் உச்சரிக்க தெரியவில்லை (சிரிக்கிறார்). ஸ்கேன் எடுத்ததுமே பந்துவீச முடியாது எனத் தெரிந்தது. பின்னர் மருத்துவக் குழுவுடன் 20 நிமிடம் உட்கார்த்து இந்த முடிவுக்கு வந்தோம்.

வெல்ல வேண்டுமென...

களத்தில் இருக்கும்போது எதைச் செய்தாவது வெல்ல வேண்டுமென நினைப்பேன். அதனால், பணிச்சுமை எல்லாம் எனக்கு தெரியவில்லை.  நான் பேட்டராக மட்டுமே விளையாடியிருக்கலாம். ஆனால், வெற்றிபெற 4 வேகப் பந்துவீச்சாளர்கள் வேண்டும். அதனால், இந்த மாற்றம் செய்யப்பட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து