முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராலிம்பிக்ஸ் போட்டி நிறைவு: 7 தங்கம் உள்பட 29 பதக்கங்களை குவித்து இந்தியா புதிய சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      விளையாட்டு
Olympics 2024-07-08

Source: provided

பாரீஸ் : பாராலிம்பிக்ஸ் போட்டி நிறைவடைந்த நிலையில் இந்தியா 7 தங்கம் உள்பட 29 பதக்கங்களை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

17-வது பாராஒலிம்பிக்... 

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. கடைசி நாளான நேற்று இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார். இதன் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவினார். முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் பூஜா தகுதி பெறவில்லை. இப்போட்டியுடன் நடப்பு பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் போட்டிகள் முடிவடைந்தன. இந்நிலையில் பதக்க பட்டியலில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என்று 29 பதக்கங்களுடன் 18-வது இடத்தை பிடித்துள்ளது. இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 

பதக்கங்கள் விவரம்:

1) வில்வித்தை தங்கம் - 1 வெள்ளி - 0 வெண்கலம் - 1.

2) தடகளம் தங்கம் - 4 வெள்ளி - 6 வெண்கலம் - 7.

3) பாட்மின்டன் தங்கம் - 1 வெள்ளி - 2 வெண்கலம் - 2.

4) ஜூடோ தங்கம் - 0 வெள்ளி - 0 வெண்கலம் - 1.

5) துப்பாக்கிச்சுடுதல் தங்கம் - 1 வெள்ளி - 1 வெண்கலம் - 2.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து