முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டிப்பு

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      இந்தியா
Arvind-Kejriwal 2024-08-27

புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., கெஜ்ரிவாலை ஜூன் 26-ம் தேதி திகார் சிறையில் வைத்து கைது செய்தது. கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமின் கோரியும் சுப்ரீம் கோர்ட்டை கெஜ்ரிவால் நாடினார். அதை தொடர்ந்து வழக்கை கடந்த 5-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் உத்தரவை ஒத்திவைத்தனர்.

அப்போது சுப்ரீம்கோர்ட்டில் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். சமூதாயத்திற்கு கெஜ்ரிவால் அச்சுறுத்தலாக இல்லை. அமலாக்கத்துறை வழக்கில் விசாரணை நீதிமன்றமும், சுப்ரீம் கோர்ட்டும் ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால், ஜாமின் கிடைத்த பின்னர் சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது என்று அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.

இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க கூடாது என சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து நேற்று முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் 25-ம் தேதி நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து