முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி முதல்வராக அதிஷி 21-ம் தேதி பதவியேற்கிறார்?

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      இந்தியா
Adishi 2024-02-04

Source: provided

புதுடெல்லி : டெல்லியின் புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட அதிஷி, வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது. முதல்வராக கோப்புகளை கையாளக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு நிபந்தனை விதித்தது. இதனால் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் டெல்லி துணை நிலை கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்வராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அதிஷியும் கவர்னரிடம் கொடுத்தார்.

இந்நிலையில் டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21-ம் தேதி என முன்மொழிந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பதவி விலகியுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதமும் திரெளபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து