முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 2025 சீசன் முதல் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 7.5 லட்சம் ஊதியம் : ஜெய்ஷா அறிவிப்பு

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      விளையாட்டு
Jaysha 2024-05-10

Source: provided

பெங்களூரு : ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வீரர்கள் அனைவரும் இனி ஒரு போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் பெறுவார்கள் என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்... 

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

பி.சி.சி.ஐ. ஆலோசனை...

இதில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பல்வேறு அணிகள் தரப்பிலும் ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ, அதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள என்சிஏ அலுவலகத்தில் பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். தொடரில் அனைத்து வீரர்களுக்கும் போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியமாக ரூ.7.5 லட்சம்... 

இதுதொடர்பாக ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், "நமது கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். தொடரிலும் போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்கிறோம். இதன் மூலமாக ஐ.பி.எல். தொடரின் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களால் ரூ.1.05 கோடி ஊதியமாக பெற முடியும். இதற்காக ஒவ்வொரு அணியும் ரூ.12.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து