முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓவல் மைதான கண்காணிப்பாளருடன் கவுதம் காம்பீர் வாக்குவாதம்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2025      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

லண்டன் : ஓவல் மைதான கண்காணிப்பாளருடன் காம்பீர்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓவல் மைதானத்தில்... 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

சமன் செய்ய தீவிரம்...

தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் இந்திய அணியினர் ஓவல் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குவாதம்...

இந்நிலையில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணியினரிடம் ஓவல் மைதான கண்காணிப்பாளர் எதோ கூறியதாக தெரிகிறது. இதனால் கடுப்பான தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், மைதான கண்காணிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இணையத்தில் வைரல்...

அதில் கவுதம் காம்பீர், மைதான கண்காணிப்பாளரை நோக்கி, "நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்ல தேவைவில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எங்களிடம் சொல்ல முடியாது. நீங்கள் ஒரு மைதான கண்காணிப்பாளர். எனவே நீங்கள் மைதான கண்காணிப்பாளர் போல இருங்கள்" என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து