முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதியக் கட்டமைப்பை உடைப்போம்: நெல்லை இளைஞர் ஆணவக்கொலைக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம்

புதன்கிழமை, 30 ஜூலை 2025      தமிழகம்
Kanimozhi

நெல்லை, நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அந்தப் பெண்ணின் தம்பி சுா்ஜித் (24), கவினை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், திருச்செந்தூர் - ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சமத்துவத்தையும் காதலையும் மறுக்கும் சாதி ஆணவக் கொலைகளை அடியோடு ஒழித்திடவும் இறுகிப்போய் கிடக்கும் இச்சமூகத்தின் சாதியக் கட்டமைப்பை உடைத்திடவும் அனைத்து வழிகளிலும் போராடுவோம். கவின் செல்வகணேஷை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து