முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பரில் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணம்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      தமிழகம்
Metro-Rail 2024-03-28

Source: provided

சென்னை : செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக செப்டம்பர் 06-ம் தேதியன்று 3,74,087 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 30,99,397 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 7,319 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 7,149 பயணிகளும், கியுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,73,640 பயணிகளும்  மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 20,90,192 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு கியுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், பேடிஎம் ஆப் மற்றும் போன் பே போன்ற அனைத்து வகை பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத  கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ் அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பே டிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம். மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து