எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1.39 லட்சம் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்தும், அதன் மூலம் மாநிலத்துக்கு கிடைத்த தொழில் முதலீடு குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன. இந்நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொழில் வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கம் காரணமாகப் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் மாநிலத்தில் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
2021-ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு, புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.
மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, 631 ஒப்பந்தங்கள் மூலம் 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின் மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டன.
நான்காம் கட்டமாக, ஜனவரி 27, 2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன் வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
5-வது கட்டமாக, முதல்வர் ஸ்டாலின், 22-9-2024 அன்று அமெரிக்கா பயணம் மேற்கொண்டு உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும் ஆற்றல் வாய்ந்த மனித வளங்களையும் எடுத்துரைத்து தொழில் தொடங்கிட வருமாறு அழைப்பு விடுத்தார்கள். அதன் பயனாக அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 11,516 புதிய வேலை வாய்ப்புககள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 21-8-2024 அன்று, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் 19 தொழில்சாலைகளைத் திறந்து வைத்துள்ளார்.
19 புதிய தொழிற்சாலைகளை தொடங்கி வைத்ததுடன், அதே நாளில் முதல்வர் ஸ்டாலின் 51,157 கோடி ரூபாய் முதலீட்டிலான 28 புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அந்தத் தொழிற்சாலைகளின் வாயிலாக, 41 ஆயிரத்து 835 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இவற்றுடன், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்காக ராணிப்பேட்டைக்கு நேரடியாகச் சென்று அங்கு சிப்காட் பனப்பாக்கம் தொழிற் பூங்காவில் அடிக்கல் நாட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இத்தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 மார்ச் மாதம் நடைபெற்று 6 மாதங்களில் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது என்பது திராவிட மாடல் அரசு தொழில் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறைக்குச் சிறிய சான்றாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளில் மொத்தம் 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கத்தக்க வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு முதலில் 27 புதிய தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளது. அத்துடன் மேலும் 19 தொழிற்சாலைகள் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 46 புதிய தொழிற்சாலைகள் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக திராவிட மாடல் அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன இதனை ஓரிரு நாட்களுக்கு முன் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
06 Jan 2026சென்னை, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-01-2026
06 Jan 2026 -
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
06 Jan 2026தஞ்சாவூர், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு இன்று உள்ளூர் விடுகுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறது தமிழ்நாடு அரசு: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
06 Jan 2026சென்னை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச
-
தமிழகத்தில் வருகிற 9, 10-ம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் வருகிற 9. 10- மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
தேசிய சராசரியை தாண்டி தமிழ்நாடு புதிய சாதனை: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கையில் தகவல்
06 Jan 2026சென்னை, சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் வினியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியை தமிழ்நாடு விஞ்சியுள்ளதாக மாநில திட்டக் கு
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
06 Jan 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 12-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) சம்மன் அ
-
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
06 Jan 2026சென்னை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை நேற்று (ஜன. 6) ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
மாநில கல்விக்கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: வருகிற 25-ம் தேதிக்குள் மக்கள் கருத்துகளை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
06 Jan 2026சென்னை, மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்களுக்கு 25-ம் தேதி கருத்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சோனியா மருத்துவமனையில் அனுமதி
06 Jan 2026புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் நடைமுறை வரும் 12-ம் தேதி முதல் அமல்
06 Jan 2026சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
'உங்கள் கனவை சொல்லுங்க' திட்டம்: வரும் 8-ம் சென்னையில் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கனவை கேட்கும் திட்டம்தான் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் என தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில்மகேஷ், இந்த திட்டத்தை வருகிற 9-ம் தேதி முதல
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி பெயர்கள் நீக்கம்
06 Jan 2026லக்னோ, தமிழகத்தை போன்றே உத்தரபிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது.
-
4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்..!
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெரம்பலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை தீர்ப்பு
06 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்றும் அரசின் மேல் முறையீட்டு மனுவை
-
திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு: இந்தோனேசியாவில் 9 பேர் பலி
06 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முகமது சமி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன்
06 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06 Jan 2026டோக்கியோ, ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி ஏற்படும் அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் பயணம்
06 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
-
அதிபர் ட்ரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விரும்பும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
06 Jan 2026காரகஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை நிச்சயம் பழிதீர்ப்போம்: நிகோலஸ் மதுரோவின் மகன் உறுதி
06 Jan 2026நியூயார்க், அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம் என்று அமெரிக்க படையால் கைது செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
-
வெனிசுலாவில் தேர்தல் கிடையாது: ட்ரம்ப்
06 Jan 2026வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவ


