முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னருடன் மோதல் போக்கு கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் கோவி.செழியன் பேட்டி

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: கவர்னருடன் மோதல் போக்கு கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

இது குறித்து அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 

தமிழக கவர்னருடைய முரண்பாடான கருத்து என்பது தமிழக அரசு எப்போதும் சரியான பாதை, சட்டவிதிகளுக்குட்பட்டு தான்   முதல்வர் அறிவுறுத்தி அதன்படி தான் செய்திருப்போம் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. இந்நிலையில், ஒருசில முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையையும், ஊடகத்திலும், நேரிலும் பார்த்த செய்திகள் உணர்த்துகிறது.

முரண்பாடு மோதல் என்பதையெல்லாம் தேவையில்லை என்ற நிலையிலும், முறையான நெறிமுறைப்படி மாணவர்கள் நலன்காக்க எவை, எவைகளை மேற்கொள்ள வேண்டுமோ அவைகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என முதல்வர் எனக்கு வலியுறுத்தியுள்ளார். 

எனவே நமது மாநில உரிமை, தமிழக அரசின் கல்வி நிலை, உயர்கல்வியின் கொள்கைநிலை, இவைகளையெள்ளாம் நிலைநிறுத்திதான் செயல்பாடுகள் அமையும். எனவே முட்டல்,மோதல் என்பது தமிழக அரசு உருவாக்கி கொள்வதில்லை. என்றைக்கும் நட்புணர்வோடு தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வரும், உயர்கல்வித்துறையும் உறுதுணையாக இருக்கும். 

துணைவேந்தருக்குக்கான தேடுதல் குழுவில், பல்கலைக் கழக மானியக் குழு உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்ற கவர்னரின் கோரிக்கையை முதல்வரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டு, துணைவேந்தர் நியமனத்தில் முரண்பாடு களையப்பட்டு விரைவில் துணைவேர்ந்தர்களும் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து