முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.பொதுச் செயலாளருக்கான இஸ்ரேல் தடையை இந்தியா கண்டிக்காதது ஏன்?: ப.சிதம்பரம்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024      இந்தியா
Chidambaram-2023-05-11

Source: provided

புதுடெல்லி : ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியா குத்ரேஸ் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைய அந்நாடு தடை விதித்திருப்பதை கண்டிக்கும் கடிதத்தில் இந்தியா கையெழுத்திடாதது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் தங்களின் எல்லைக்குள் நுழைய தடைவித்தித்திருக்கும் இஸ்ரேலைக் கண்டிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் 104 நாடுகளில் இந்தியா ஏன் இணைந்து கொள்ளவில்லை என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.

இதன் மூலம் இந்தியா அதன் பிரிக்ஸ்  கூட்டாளிகளான பிரேசில், தென்னாபிரிக்காவின் புரிதல்களை முறித்துள்ளது. மேலும் இந்தியாவுடன் நட்பு மற்றும் நல்லுறவுகளைப் பேணும் தெற்காசியா, மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளின் உறவினையும் முறித்துக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஓர் அலுவலர். அரசியல் வேறுபாடுகளை வெளியேற்றுவதற்கு இருக்கும் ஒரே சர்வதேச அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையே. தங்கள் நாட்டுக்குள் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் நுழைய இஸ்ரேஸ் தடைவிதித்திருப்பது மிகவும் தவறானது.

இஸ்ரேலின் செயலைக் கண்டிக்கும் கடிதத்தில் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா இருந்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து