முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் அமளியுடன் தொடங்கியது காஷ்மீரில் சட்டசபை முதல் கூட்டம் : சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம்

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2024      இந்தியா
Kashmir 2024-11-04

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. அப்போது சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு  எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையடுத்து சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிக்கு நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. 10 வருடங்களுக்கு பிறகு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தது.

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர்அப்துல்லா பதவி ஏற்றார். அவரது தலைமையில் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒப்புதலுக்காக துணை நிலை கவர்னர் மனோஜ் சின்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் ஒப்புதல் வழங்கி இருந்தார். 

இது தொடர்பாக உமா் அப்துல்லா டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசி இருந்தார். இந்த நிலையில் காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது.தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், 7 முறை எம்.எல்.எ.வுமான அப்துல் ரகீம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்ட சபையின் முதல் சபாநாயகராக தேர்ந்து எடுக்கப் பட்டார்.

அதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்ததை எதிர்த்தும், சிறப்பு அந்தஸ்தை வழங்க வலியுறுத்தியும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) எம்.எல்.ஏ. வகீத் பாரா தீர்மானம் கொண்டு வந்தார்.

புல்வாமா எம்.எல்.ஏ. வான அவர் கூறும்போது, ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்த அவை எதிர்க்கிறது என்று கூறி தீர்மானத்தை முன் வைத்தார். இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 28 எம்.எல்.ஏ.க்களும் இதற்கு எதிராக எழுந்து நின்றனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

சட்டசபை விதிகளை மீறி தீர்மானம் கொண்டு வந்ததற்காக வகீத் பாராவை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஷாம்லால் சர்மா கோரிக்கை வைத்தார். அமளிக்கு பிறகு உமர் அப்துல்லா பேசினார். அதைத் தொடர்ந்து கவர்னர் மனோஜ் சின்கா உரை ஆற்றினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து