முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து அல்லாத ஊழியர்களை வெளியேற்ற தேவஸ்தானம் முடிவு: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வரவேற்பு

புதன்கிழமை, 20 நவம்பர் 2024      ஆன்மிகம்      இந்தியா
Tirupati 2023 03 30

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து அல்லாத ஊழியர்களை வெளியேற்றும் தேவஸ்தானத்தின் முடிவுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வரவேற்பு தெரிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு சமீபத்தில் மாற்றப்பட்டது. பி.ஆர்.நாயுடு தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் குழு கூட்டம் சமீபத்தில் திருமலை அன்னமய பவனில் நடந்தது. லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்த பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும். 

இக்கூட்டத்தில் கோவில் நிர்வாகம் தொடர்பான சில முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, தேவஸ்தான ஊழியர்களில் இந்து ஊழியர்கள் தவிர மற்ற மதத்தைச் சேர்ந்த ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பி.ஆர் நாயுடு, 

கோவில் நிர்வாகத்தில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்களை மாற்ற முடிவு செய்து இருக்கிறோம். ஆந்திர அரசிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்றார். 2018-ம் ஆண்டு வெளியான புள்ளிவிவரப்படி, திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பிற மத ஊழியர்கள் 44 பேர் பணியாற்றுகிறார்கள். பிற மத ஊழியர்களை வெளியேற்றும் முடிவை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாக, வெங்கடேஸ்வர சுவாமிக்கு அருகில் சேவை செய்பவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இந்துக்கள் அல்லாதவர்கள் இருக்கக் கூடாது.வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் பல ஆண்டுகளாக இந்துக்கள் அல்லாதோர் பணிபுரிந்து வருகின்றனர். ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்து சமூகத்தில் ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே வெங்கடேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பதே இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 

இனி இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்து கோவிலுக்கும் இறைவனுக்கும் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியா முழுவதும் இது நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்து சமூகத்தினராக இருந்தாலும் சரி, வேறு எந்த சமூகத்தினரின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் சரி, அவர்களின் மத நம்பிக்கையில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே அந்தந்த வழிபாட்டு தலங்களில் பணிபுரிய வேண்டும். அத்தகைய முடிவை எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து