எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை 25-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும், தமிழகத்தில் நாளை 25-ம் தேதி 4 மாவட்டங்களுக்கும், நாளை மறுதினம் 26-ம் தேதி 6 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 23-ம் தேதி காலை 8.30 மணி அளவில் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை 25-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை 25-ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், அரியலூர், சிவகங்கை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுதினம் 26-ம் தேதி தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 27-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 28-ம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 29-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று 24-ம் தேதி தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 days ago |
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
30 May 2025சென்னை : தமிழ்நாட்டில் ஜூன் 9-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியானது. இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
-
பஹல்காம் தாக்குலில் பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி
30 May 2025சகேரி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்தித்தார்.
-
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
30 May 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டது.
-
மதுரையில் நாளை நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம்: 20 கி.மீ. தூர ரோடு ஷோவில் பங்கேற்கிறார் முதல்வர்
30 May 2025மதுரை, மதுரை பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 20 கி.மீ.
-
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி.யுடன் மீண்டும் மோதுவோம்: பஞ்சாப் அணி பயிற்சியாளர் நம்பிக்கை
30 May 2025முல்லான்பூர் : இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்.சி.பி.யுடன் மோதுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோ
-
நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையே தொடர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
30 May 2025சென்னை, தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையே தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
வைகோவின் சகோதரி மறைவு: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
30 May 2025சென்னை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா அம்மையார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க.பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார்: ராமதாஸ் உத்தரவை புறக்கணித்த அன்புமணி
30 May 2025சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமாவே தொடர்வார் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை: பிரதமர் எச்சரிக்கை
30 May 2025பாட்னா, பயங்கரவாதம் பாம்பு போன்றது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்படவும் இல்லை' என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2025
30 May 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
30 May 2025சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
-
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல்: பாக். பிரதமர் ஷெபாஸ் வேதனை
30 May 2025இஸ்லமாபாத் : பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கிவிட்டதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்? - திருப்பூரில் தீவிர கண்காணிப்பு
30 May 2025திருப்பூா் : திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
தி.மு.க. அரசு மீது அவதூறு பரப்ப எதிர்கட்சிகள் முயற்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
30 May 2025சென்னை : திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந
-
மேலும் 4 புதிய அரசு கலை கல்லூரிகள் தொடங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 May 2025சென்னை : 2025-26ம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகள்: தளர்த்துமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு திடீர் பரிந்துரை
30 May 2025புதுடெல்லி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் தொடர் எதிர்ப்பு காரணமாக சிறு நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
30 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
எல்சா-3 சரக்கு கப்பல் விபத்து: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
30 May 2025சென்னை : எல்சா-3 சரக்கு கப்பல் விபத்து தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
மாலத்தீவில் மாணவனை தாக்கி கைது: இந்திய ஆசிரியர் விடுதலை
30 May 2025மாலி : மாலத்தீவில் பள்ளி மாணவனை தாக்கி கைதான இந்திய ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டார்.
-
குன்னூரில் மலைபயிர்கள் கண்காட்சி: பனை ஓலைகளில் உருவங்கள் வடிவமைப்பு
30 May 2025குன்னூர் : கோடை விழாவின் இறுதி நிகழ்வாக நேற்று முதல் குன்னூர் காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.
-
முதுநிலை நீட் தேர்வை ஒரே 'ஷிப்ட்டில்' நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 May 2025டெல்லி : முதுநிலை நீட் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், 2 ஷிப்ட்டுகளில், 2 வ
-
தி.மு.க.வுடன் கூட்டணி ஏன் ? ம.நீ.ம. தலைவர் கமல் பேட்டி
30 May 2025சென்னை, நாட்டுக்கு தேவை என்பதால் தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வந்துள்ளேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
குமரியில் வீசிய கடும் சூறைக்காற்று: மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் சேதம்
30 May 2025நாகர்கோவில், : குமரி மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.
-
கோவை, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
30 May 2025சென்னை : கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 May 2025சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்து விற்பனையானது.