முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் நாளை நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம்: 20 கி.மீ. தூர ரோடு ஷோவில் பங்கேற்கிறார் முதல்வர்

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      தமிழகம்      அரசியல்
DMK-2025-05-30

மதுரை, மதுரை பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 20 கி.மீ. தூர ரோடு ஷோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடக்கிறது. இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி தலைமையில் நடந்து வருகிறது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பொதுக்குழு நடைபெறும் பந்தலில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. குளு, குளு ஏ.சி.வசதியுடன் இருக்கைகளும், வண்ண விளக்குகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.  பல்வேறு வகையான உணவுகள் சுமார் 3 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் பிரமாண்ட கட்-அவுட்டுகளும் வைக்கப்பட உள்ளது. அரங்கின் முன்பு 100 அடி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட பொதுக்குழுவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மதுரை வருகிறார். அதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலையின் இருபுறங்களில் தி.மு.க. கொடி அமைக்கப்படுகிறது. மேலும் முதல்வர் பங்கேற்கும் பிரமாண்டமான ரோடு ஷோ சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது. தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கட்அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமைச்சர் மூர்த்தி தலைமையில், தி.மு.க. நிர்வாகிகள் பணிகளை முன்னின்று கவனித்து வருகின்றனர். பொதுக்குழு பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளன. முடிந்துள்ளது. தி.மு.க. பொதுக்குழு கூட்டங்கள் பெரும்பாலும் சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே நடைபெறும். ஆனால் இம்முறை சென்னைக்கு வெளியே மதுரையில் நடைபெற இருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து உள்ளது. 1977-க்கு பின் மதுரையில் தற்போதுதான் தி.மு.க. பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்குழுவில் மேற்கொள்ளப்படும் தீர்மானங் கள் மற்றும் முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்புகளும் கூடி இருக்கின்றன.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து