முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி.யுடன் மீண்டும் மோதுவோம்: பஞ்சாப் அணி பயிற்சியாளர் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      விளையாட்டு
Punjab 2025-04-16

Source: provided

முல்லான்பூர் : இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்.சி.பி.யுடன் மோதுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று   பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.

முதல் அணியாக... 

ஐ.பி.எல். தொடரில் சண்டீகரில் நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், முதல் அணியாக ஆர்.சி.பி. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தயாராக வேண்டும்... 

நடப்பு ஐ.பி.எல். தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டி சிறப்பானதாக அமைய வில்லை. ஆர்.சி.பி.யின் அபார பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இந்த நிலையில், குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து யோசிப்பதை தவிர்த்து, குவாலிபையர் 2 போட்டிக்கு வீரர்கள் தயாராக வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மோதுவோம்...

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் குவாலிஃபையர் 1 போட்டி குறித்து அதிகம் யோசிக்காமல், குவாலிஃபையர் 2 போட்டிக்குத் தயாராக வேண்டும். ஆட்டத்தின் முதல் ஓவரை நன்றாக தொடங்கினோம். அதன் பின், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். ஜீரணிப்பதற்கு கடினமாக இருந்தாலும், இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு குவாலிஃபையர் 2 போட்டியில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்.சி.பி.யுடன் மோதுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

நாளை...

குவாலிபையர் 2 போட்டி நாளை  (ஜூன் 1) அகமதாபாதில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அல்லது குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ளவுள்ளது. குவாலிஃபையர் 2 போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து