முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் கைது ஷேக் ஹசீனா கண்டனம்

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      இந்தியா
Sheick-Hasina

Source: provided

 

டாக்கா: வங்கதேசத்தில் இந்து மதத்தலைவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்

வங்கதேசத்தில் உள்ள சம்மிலிதா சனாதனி ஜோதே என்ற  இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், இஸ்கான் எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில்,  கடந்த மாதம் 30-ம் தேதி இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாசை சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.   தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. இவரது கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,   இந்து மதத்தை சேர்ந்த தலைவரை போலீசார் தவறாக கைது செய்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து