முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை-செப். காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்தது

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      வர்த்தகம்
growth

புதுடெல்லி, வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்தது. 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டில் சரிந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முன்பு, 2022-23 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 4.3 சதவீதமாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி துறையில் உற்பத்தி வெகுவாக குறைந்ததால் வளர்ச்சி குறைந்துள்ளது. அதேசமயம், வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. அண்டை நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 4.6 சதவீதமாக உள்ளது. 

தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின்படி, வேளாண் துறையின் மொத்த மதிப்பு கூட்டல் (ஜி.வி.ஏ) 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 1.7 சதவீதமாக இருந்தது. அது இந்த ஆண்டு 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், உற்பத்தித் துறையின் ஜி.வி.ஏ. வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் 2.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 14.3 சதவீதமாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டில் 6 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 6.7 சதவீதம் என்பதில் மாற்றம் இல்லை. என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து