முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நிவாரண உதவி

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      தமிழகம்
Tvk-Vijay 2024-12-03

Source: provided

 

சென்னை: பெஞ்சல் புயல் மற்றம் கனமழையால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை த.வெ.. தலைவர் விஜய் வழங்கினார்.

வங்கக் கடலில் உருவாகிய பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் மிதமான காற்றுடன் மழை பெய்தது.

காலை நேரத்தில் விட்டு விட்டு பெய்த மழை, பின்னர் வெளுத்து வாங்கியது. சில மணிநேரம் இடைவிடாமல் கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். சுரங்கப்பாதைகள் மழைநீரால் நிரம்பி, நீச்சல் குளம் போன்று மாறின. இதனால் சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

பெரும்பாலான சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. அந்த சமயத்தில் சாலையில் தேங்கிய தண்ணீர் வேகமாக வடிய தொடங்கின. ஒருசில இடங்களில் மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது. மழை காரணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் பெஞ்சல் புயல் மற்றம் கனமழையால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களை த.வெ.. தலைமை அலுவலகமான பனையூருக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழங்கினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் தனித்தனியாக குறைகளை கேட்டறிந்தார்.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து