முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஃபெஞ்சல் புயல் பாதித்த புதுச்சேரி, காரைக்கால் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      தமிழகம்
Puducherry 2024-12-06

புதுச்சேரி, ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, காரைக்கால் பேரிடர் பாதித்த பகுதிகளாக நேற்று அறிவிக்கப்பட்டது. 

ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டது. சுமார் 50 செ.மீ மழை பொழிந்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, 3.54 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து ரூ.600 கோடி முதல்கட்ட நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், வருவாய்த் துறை சிறப்பு செயலர் குலோத்துங்கன் வெளியிட்ட உத்தரவில், "புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இப்பகுதிகள் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து