முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டை முன்னிட்டு தி.மலை கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      ஆன்மிகம்
Thiruvannamalai 2023 04 04

Source: provided

வேங்கிக்கால் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதுகிறது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை தினமான வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக, வெளிமாவட்ட மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில பக்தர்கள் வருகை அதிகரித்தது. அதோடு, சபரிமலை செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மாட வீதி வரை 1 கி.மீ. தூரம் நீண்டிருந்தது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்தனர்.

பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், ரூ. 50 கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டது. தரிசனம் முடிந்ததும், தெற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. விரைவு தரிசனத்துக்காக ஒற்றை வழி தரிசன முறை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில், கிளி கோபுரம் நுழைவு வாயில்களில் நெரிசல் காணப்பட்டது.

இந்நிலையில், நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும், மாட வீதியில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து