முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      உலகம்
Apple-i-phone-2024-06-17

Source: provided

லாஸ் ஏஞ்செல்ஸ் : கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து இந்தியர்கள் உள்பட   50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் தொண்டு செய்தால், அவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு ஆப்பிள் பணியாளர் நன்கொடை அளித்தால், அதன் ரசீதைக் காட்டி, அந்த நன்கொடை தொகையை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம். மேலும், நன்கொடை தொகைக்கு வரி விலக்கும் உண்டு. இந்த நிலையில், அங்கு பணிபுரியும் சிலர், தங்கள் சொந்த தொண்டு நிறுவனத்துக்கே நன்கொடை அளித்து, அதன் ரசீதைக் காட்டி, நிறுவனத்திடம் இருந்து நன்கொடை தொகையையும் பெற்றுள்ளனர். இதன்மூலம், அவர்கள் அளிக்கும் நன்கொடையும் அவர்களுக்கே கிடைக்கும்; நிறுவனம் சார்பாகவும் நன்கொடை கிடைக்கும். 

இதற்கிடையே, நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் அதிகமானோர் திடீரென நன்கொடை அளித்து வருவதால், ஆப்பிள் நிறுவனத்துக்கு சந்தேகம் துளிர்விட்டது. இதனைத் தொடர்ந்து, நன்கொடை அளிப்பவர்கள் குறித்தும், அவர்கள் நன்கொடை அளிக்கும் தொண்டு அமைப்புகள் குறித்தும் விசாரணை நடத்தியதில், நன்கொடை அளிப்பவர்களின் சொந்த தொண்டு அமைப்புகளுக்கே பணம் செலுத்தப்படுவது தெரிய வந்தது. இவ்வாறான மோசடி மூலம் 3 ஆண்டுகளில் சுமார் 1.52 லட்சம் டாலர் (ரூ. 1.30 கோடி) மோசடி செய்த 6 பேர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வகையான மோசடியில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்தும் அதிரடியான நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதுதவிர, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் இந்தியர்கள் இருப்பினும், அவர்களில் பெரும்பாலும் தெலுங்கர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து