முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பிரதேசத்தில் வினோதம்: ஹெல்மெட் அணியவில்லை என நடந்து சென்றவருக்கு அபராதம்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      இந்தியா
Police 2023-11-05

Source: provided

போபால் : நடந்து சென்றவருக்கு ஹெல்மெட் அணியவில்லை என  அபராதம் விதித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் பகுதியை சேர்ந்தவர் சுஷில் குமார் சுக்லா. இவர் தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்காக விருந்தினர்களை அழைப்பதற்கு சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக காவல்துறை வாகனத்தில் சென்ற போலீசார் அவரை தடுத்தி நிறுத்தியதாகவும், பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சிறிது நேரம் காவலில் வைத்துவிட்டு, ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி ரூ.300 அபராதம் விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுஷில் குமார் சுக்லா, இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அஜய்கர் துணை பிரிவு காவல் அதிகாரி ராஜீவ் சிங் பதோரியா தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து