முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா: தீ விபத்தில் 2 சிறுவர்கள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      இந்தியா
Fire

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசாவின் பவுத் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 

பவுத் மாவட்டத்தின் சதார் தொகுதியில் உள்ள முண்டிபதர் பஞ்சாயத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2  சிறுவர்கள் குளிர்காலம் என்பதால் மாலையில்  தங்கள் வீட்டிற்கு வெளியே தீ மூட்டி அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தீ பரவத் தொடங்கியது, சிறுவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த வைக்கோல் குவியலில் தஞ்சம் புகுந்தனர்,

ஆனால் அதுவும் தீப்பிடித்தது. இதனால் குழந்தைகள் உதவிக்காக அலறுவதைக் கேட்டு மக்கள் திரண்டனர். அங்கு வந்த பொது மக்கள் பாதிக்கப்பட்ட 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மஜி இரங்கல் தெரிவித்தார். மேலும் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து