எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024--ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது உள்ளிட்ட பத்து விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (15.1.2025) தலைமைச் செயலகத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு 2025-ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தந்தை பெரியார் விருது மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது ஆகிய பத்து விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், கலைஞர் கருணாநிதி தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார். கலைஞரின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
மேலும், கலைஞரால் சென்னையில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டதோடு, கன்னியாகுமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. கலைஞரால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி கடந்த டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய நாள்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு, அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு விழா, திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலர் வெளியீடு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்க்குப் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலைஞரின் வழியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறது, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி விருது என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கும், 2024-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலுவுக்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார்.
இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது விடுதலை இராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமாருக்கும், முதல்வர் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
கலைஞர் கருணாநிதியின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் விருது 2024-இல் தோற்றுவிக்கப்பட்டு, முதன் முறையாக இவ்விருது முத்து வாவாசிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருதுடன், விருதுத் தொகையாக பத்து லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் சிறப்பித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-02-2025.
14 Feb 2025 -
துரோகிகள் குறித்த பேச்சுக்கு செங்கோட்டையன் விளக்கம்
14 Feb 2025ஈரோடு : துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவில் 2 புதிய இந்திய தூதரகங்கள் பிரதமர் மோடி அறிவிப்பு
14 Feb 2025வாஷிங்டன்:இந்திய - அமெரிக்க மக்களுக்கு இடையிலான மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவி
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Feb 2025சென்னை : சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
6 மாத காலம் அமைதியாக இருங்கள்: ஓ.பி.எஸ்.,சை கட்சியில் சேர்க்க ராஜன் செல்லப்பா நிபந்தனை
14 Feb 2025மதுரை: ஆறு மாத காலம் அ.தி.மு.க.-வுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து நடவடிக்கை எடுப்போம்
-
சீன எல்லை விவகாரத்தில் ட்ரம்ப்பின் மத்தியஸ்த முயற்சி: நாசூக்காக தவிர்த்தது இந்தியா
14 Feb 2025வாஷிங்டன் : சீனா உடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவ தயார் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அந்த உதவியை இந்தியா தவிர்த்துள்ளது.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர்
14 Feb 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகின்றனர்.
-
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
14 Feb 2025இஸ்லாமாபாத் : நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை: அரசு மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
14 Feb 2025சென்னை : மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காத தி.மு.க. அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
சென்னையில் வேல் யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு
14 Feb 2025சென்னை : சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி : உயர் நீதிமன்றம் உத்தரவு
14 Feb 2025கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் பர்த்வான் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை: ராமேசுவரத்தில் தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்
14 Feb 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பாக நாளை (பிப்.16-ம் தேதி), ர
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு : மத்திய அரசு உத்தரவு
14 Feb 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
மார்ச் 6-ம் தேதி செட் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
14 Feb 2025சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான செட் தகுதித்தேர்வு மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. வாக்கு சதவீதம் குறைந்ததா? - முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு
14 Feb 2025சென்னை : அ.தி.மு.க. பின்தங்கியதாக கூறப்படும் கருத்துக்கணிப்புகளுக்கு முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு தெரிவித்துள்ளார்,
-
புல்வாமா தாக்குதல் தினம்: உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் புகழாரம்
14 Feb 2025புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு இதே நாளில் (பிப்.14) ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்.
-
வங்கதேசம் குறித்த கவலையை ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி
14 Feb 2025வாஷிங்டன்: வங்கதேச நிலைமை குறித்த தனது கவலையை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்டார் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது
-
இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தகத்தை 2030-க்குள் 500 பி.டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் சந்திப்பில் முடிவு
14 Feb 2025வாஷிங்டன்: பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பில், வரும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.
-
இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது : அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து
14 Feb 2025வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரில் விமான சாகச நிகழ்ச்சி நிறைவு
14 Feb 2025பெங்களூரு : பெங்களூரில் ஏரோ இந்தியா 2025 என்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
-
இந்தியாவிற்கு எப்-35 ரக விமானங்களை வழங்குகிறது அமெரிக்கா: டிரம்ப் தகவல்
14 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்கா இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
14 Feb 2025கீவ் : ரஷியா டிரோன் தாக்குதலில் உக்ரைன் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
-
நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி
14 Feb 2025பெர்லின் : புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
-
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது
14 Feb 2025இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
-
திருமணத்திற்கு செல்வதில் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
14 Feb 2025லக்னோ : திருமணத்திற்கு செல்வதில் ஏற்பட்ட தகராறில் கணவன்- மனவைிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.