முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      இந்தியா
Rahul 2024-05-27

Source: provided

புதுடில்லி : மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி  எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

ராகுல் காந்தி சமீப காலமாக காய்கறி விற்பனையாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளி, லாரி ஓட்டுநர், ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருவதோடு அதற்கான விடியோவையும் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தலைநகர் டில்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல்காந்தி நேற்று முன்தினம் திடீரென சென்றிருந்தார். அங்குள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தியின் எக்ஸ் பதிவில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தேன். அங்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மாதக்கணக்கில் காத்திருப்பதும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன்.  அதீத குளிர், பசி, சுரங்கப்பாதைகளில் படுத்து உறங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதான் இன்றைய டில்லி எய்ம்ஸின் உண்மை நிலை. இதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது. ஆனால் அவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார். மத்திய மற்றும் டில்லி அரசுகள் இவர்கள் மீது பாராமுகமாக இருப்பது பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து