முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எளியவர்களின் விருப்பத்துக்குரியவர்: எம்.ஜி.ஆருக்கு கமல்ஹாசன் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      தமிழகம்
Kamal 2023-09-19

Source: provided

சென்னை : ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என்று மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் கூறியுள்ளார். 

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத்தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று (நேற்று) அவரது நினைவைக் கொண்டாடும் லட்சோப லட்ச இதயங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து