முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துரோகிகள் குறித்த பேச்சுக்கு செங்கோட்டையன் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

Source: provided

ஈரோடு : துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் பேச்சும், செயல்பாடுகளும் தான் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன

ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். பொதுவாக இது போன்ற விழாக்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமி படம் சிறியதாகவும் அதைவிட சிறியதாக செங்கோட்டையன் படம் இருக்கும். ஆனால் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் படம் இருக்கும் அதே சைசில் செங்கோட்டையனின் படம் இருந்தது கவனிக்கத்தக்கதாக இருந்தது.

இந்தநிலையில், இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில், தி.மு.க.  ஆட்சியில் பல்வேறு சோதனைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். எனவே தொண்டர்களோடு தொண்டராக இருந்து நான் பணியாற்றி மீண்டும் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம். சில துரோகிகளால் நாம் தேர்தலில் தோற்றோம். அவர்களை அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் என பரபரப்பாக பேசியிருந்தார் இது கட்சியினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது:-

அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம்தான் காரணம் என கூறினேன். துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். ஆர்.பி. உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை. நான் செங்கோட்டையனை விமர்சிக்கவில்லை என ஆர்.பி. உதயகுமாரே கூறிவிட்டாரே. கூட்டத்தில் பேசும் போது கட்சியின் பொதுச்செயலாளர் என தெளிவாக குறிப்பிட்டேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து