முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் வீராங்கனைகளுக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டு

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      விளையாட்டு
Smriti-Mandhana 2024-08-21

Source: provided

பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அசத்தலான மிடில் ஆர்டர் பேட்டிங்கை அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டியுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக்... 

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாதனையை வெற்றியைப் பதிவு செய்தது.

மந்தனா பாராட்டு...

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரிச்சா கோஷ் மற்றும் எல்லிஸ் பெரியை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிடில் ஆர்டர் வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் விளையாடியதை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. வலைப் பயிற்சியில் அவர்கள் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களது கடுமையான வலைப் பயிற்சி போட்டியின்போது கைகொடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் பந்துவீசுவது மிகவும் கடினம் எனத் தெரிந்தது. அதனால், ஆட்டம் எங்களது கைகளை விட்டு நழுவவில்லை என்பதை உணர்ந்தோம் என்றார்.

போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீராங்கனைகள் எல்லிஸ் பெரி (57 ரன்கள்), ரிச்சா கோஷ் (64 ரன்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து