முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி விமர்சனம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      சினிமா
Daily-Review 17-02-2025

Source: provided

ஐடியில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீகாந்த் தனக்கு மனைவியாக வருபவர், தன்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும் என நினைக்கிறார். நாயகி சிந்தியா அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வேலையை விட்டு விட்டு கணவன் மற்றும் குடும்பத்தாரை கவனித்துக் கொண்டு வாழ நினைக்கிறார். இப்படி எதிர்மறை எண்ணங்களுடன் இருக்கும் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவரது எண்ணங்களும் தெரிய வர, அதனால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட, அதில் இருந்து மீண்டார்களா? இல்லையா ? என்பதை கமர்ஷியல் கலந்து சொல்லி இருக்கும் படமே தினசரி. ஆசையை நிறைவேற்ற பேராசைப்படும் குடும்பஸ்தனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், தான் நினைத்தது நடக்கவில்லை என்றதும் மனம் வருந்தி தடுமாறும் காட்சிகளில் அழுத்தமாக நடித்திருக்கிறார். நாயகி சிந்தியா லூர்தே, அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், வினோதினி, பிரேம்ஜி உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். எழுதி இயக்கியிருக்கும் ஜி.சங்கர், இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது என்ற பழ மொழிக்கேற்ப கதையை செதுக்கி இருக்கிறார். மொத்தத்தில், தினசரி மக்களை யோசிக்க வைக்கும் படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து