Idhayam Matrimony

2024-ன் சிறந்த வீரர் உள்ளிட்ட 4 ஐ.சி.சி. விருதுகளை பெற்ற இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      விளையாட்டு
bumra

Source: provided

துபாய்: கடந்த 2024-ம் ஆண்டின் சிறந்த வீரர் உள்ளிட்ட 4 ஐ.சி.சி. விருதுகளை இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா பெற்றுக்கொண்டார்.

திடீர் வருகை...

8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் துபாய் சர்வதேச மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா திடீரென அந்த மைதானத்துக்கு சென்றார்.

வீரர்கள் மகிழ்ச்சி...

அவரை பார்த்ததும் இந்திய வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் அனைவரையும் பும்ரா சந்தித்து பேசினார். முன்னதாக, பும்ரா 2024ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்ற விரர், 2024ம் ஆண்டின் சிறந்த டி20 அணியில் இடம்பெற்ற வீரர் என ஐ.சி.சி அறிவித்த 4 விருதுகளையும் இந்த மைதானத்தில் வைத்து பெற்றுக் கொண்டார். இந்த விருதுகளுடன் அவர் துபாய் மைதானத்தில் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காயம் காரணமாக பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து