முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என்று  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில்,  தி.மு.க.   அரசு  கொலைகளை "தனிப்பட்ட பிரச்சினைகள்" என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்..

வருமுன் காப்பதும் இல்லை - பட்டும் திருந்துவது இல்லை என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க.   அரசுக்கு எனது கடும் கண்டனம்.  

தனது ஆட்சியில் நடக்கும் அனைத்து தவறுகளையும், எதை போட்டு மறைக்க, என தெரியாமல் , யாரொ கதை வசனம் எழுதி கொடுத்த திசை திருப்பும் நாடகங்களில் நடிக்க கிளம்பியிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது, சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லி கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்து விட முடியாது, இரும்புக்கரம் என்று  வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது, தி.மு.க.   ஆட்சியில் மீதம் இருக்கின்ற சிறிது காலத்திலாவது, மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து