முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் டேவிட் வார்னர்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      விளையாட்டு
Warner 2023-09-10

Source: provided

ஆஸி. முன்னாள் கிரிக்கெட்டர் டேவிட் வார்னர்  தெலுங்கு  சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

ஓய்வு... 

37 வயதான வாா்னா் டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். கடந்த 2009-இல் அறிமுகமான வாா்னா், டி20யில் 110 ஆட்டங்களில் 3,277 ரன்களும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களும் 161 ஒருநாள் ஆட்டங்களில் 6,932 ரன்களும் எடுத்துள்ளார்.

ரீல்ஸ்கள்...

ஐ.பி.எல்.  கிரிக்கெட் தொடரிலிருந்து பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஸ்டைலில் இவர் செய்யும் ரீல்ஸ்கள் மிகவும் புகழ் பெற்றவை.  தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என இந்திய விழாக்களுக்கு தவறாமல் வாழ்த்துகளைத் தெரிவிப்பார். "டேவிட் வார்னர் ஆஸ்திரேலியரை போல் அல்லாமல் இந்தியராகவே அதிகம் இருக்கிறார். நான் அதைத்தான் அவரிடம் சொல்லுவேன். 70 சதவிகிதம் இந்தியர்; மீதி 30 சதவிகிதம் ஆஸ்திரேலியர்” என வார்னர் குறித்து அவரது சக தோழர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவில்... 

புஷ்பா 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தில் அந்தமாதிரி எதுவும் வரவில்லை. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் நடிப்பது உறுதியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ராபின்ஹூட் என்ற திரைப்படத்தில் டேவிட் வார்னர் நடிக்கிறார். இந்தப் படம் மார்ச்.28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நடிகர் நிதின், நடிகை ஸ்ரீ லீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார். நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து