முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 26 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      இந்தியா
Aims 2023-09-28

Source: provided

புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஜப்பான் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026 அக்டோபரில் நிறைவடையும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவடைந்துள்ன. எய்ம்ஸ் கட்டுமான திட்ட நடவடிக்கைகளுக்கான நிதியை வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து