முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து புதிய சாதனை : பிரதமர் மோடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் நிலக்கரி முக்கிய எரிசக்தி ஆதாரமாக உள்ளது. மின்சாரம் தயாரிக்கவும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் எரிபொருளாகவும் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.  

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தியானது ஒரு பில்லியன் டன்னை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில்,  'அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் திறமையான பணிகள் மூலம், உற்பத்தியை அதிகரித்திருக்கிறோம். இந்த சாதனையானது அதிகரித்து வரும் மின் தேவைகளை சமாளிக்க உதவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.  பிரதமரின் தொலைநோக்கு தலைமையின்கீழ், இந்தியா உலகளாவிய எரிசக்தி தலைமையாக மாறுவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறது' என்று கூறி உள்ளார்.

மத்திய மந்திரியின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி,  '1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி என்ற மகத்தான மைல்கல்லை கடந்தது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சுய சார்புக்கான நமது உறுதிப்பாட்டை உணர்த்துகிறது. இந்த சாதனை, நிலக்கரி துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது' என கூறி உள்ளார்.

கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) 997.83 மில்லியன் டன் (0.99 பில்லியன் டன்) நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து